Marandahalli Map

Saturday, May 31, 2014

ராக்கிங் தொடர்பான விளக்க குறிப்புகள் அடங்கிய சிறு கையேடு வழங்க வேண்டும்

ராக்கிங் தொடர்பான விளக்க குறிப்புகள் அடங்கிய சிறு கையேடு வழங்க வேண்டும்.

 

தர்மபுரி,
மாணவர் சேர்க்கையின்போது ராக்கிங் தொடர்பான விளக்க குறிப்புகள் அடங்கிய சிறு கையேடு வழங்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு கலெக்டர் விவேகானந்தன் அறி வுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாணவ -மாணவிகளை ராக்கிங் செய்வதை தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, உதவி கணக்கு அலுவலர் தண்டபாணி, பாப்பாரப்பட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கருணாகரன் பாப்பிரெட்டிப்பட்டி தனி தாசில்தார் விஜயா மற்றும் 50-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துக்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும் ராக்கிங்கை தடுக்க கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அமைக்கவேண்டும். அனைத்து கல்லூரி வளாகத்திலும் ராக்கிங்கை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு, தண்டனைகள் மற்றும் குழுவினரின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண் தொடர்பான தகவல் பலகை அமைக்கவேண்டும். மாணவர்களின் அடையாள அட்டையின் பின்புறம் ராக்கிங் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரி குறிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
சிறு கையேடு
எஸ்எம்எஸ். மூலம் மாணவர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் 8903891077 என்ற எண்ணை பயன்படுத்தலாம். ராக்கிங் குறித்து அனைத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுடன் கூட்டம் நடத்தவேண்டும். புதிய மாணவ- மாணவிகள் மற்றும் பழைய மாணவ மாணவிகளிடையே ராக்கிங் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும். மாணவர்கள் சேர்க்கையின்போது ராக்கிங் தொடர்பான விளக்க குறிப்புகள் அடங்கிய சிறு கையேடு வழங்கி அதில் நான் தவறு செய்தால் என்னை கல்லூரியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்பதை அறிந்துகொண்டேன் என கையொப்பம் பெறவேண்டும் என்று அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

No comments: