Marandahalli Map

Saturday, May 31, 2014

ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறப்பதை தடுக்க 6 மொழிகளில் எச்சரிக்கை பலகை

ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறப்பதை தடுக்க 6 மொழிகளில் எச்சரிக்கை பலகை

பென்னாகரம்,
ஒகேனக்கல் ஆலாம்பாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறப்பதை தடுக்க 6 மொழிகளில் எச்சரிக்கை தகவல் பலகை வைக்கப் பட்டுள்ளது.
சுற்றுலா தலம்
ஒகேனக்கல் சுற்றுலா தலத் திற்கு பண்டிகை நாட்கள் மற் றும் விடுமுறை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். அவர்கள் காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடும் கண் கொள்ளா காட்சியை பார்த் தும், அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்கின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும் பாலானவர்கள் ஆலாம்பாடி பரிசல் துறையில் குளித்து வருகின்றனர். இங்கு ஆழம் நிறைந்த பகுதி என்பதால் ஆழம் தெரியாமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள் தண் ணீரில் அடித்து செல்லப்படுவ தும், நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதும் வழக்கமாக நடை பெற்று வருகிறது. எனவே ஆலாம்பாடி பரிசல் துறை பகுதியில் உயிர் பலி ஏற்படு வதை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 6 மொழிகளில் விளம்பர தட்டி வைக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட் டது.

எச்சரிக்கை தகவல் பலகை

அதனை தொடர்ந்து ஆலாம் பாடி பரிசல் துறைக்கு செல்லும் பகுதியில் பாறைகள் மிகுந்த பகுதி, வழுக்கும் பாறைகள், கூர்மையான பாறைகள் மிகுந்த பகுதி, உயிர் சேதம் அதிகமாக ஏற்பட்ட பகுதி, மிகுந்த ஆபத்து, குளிக்க தடை, மீறினால் காவல் துறை மூலம் தண்டிக்கப்படுவீர் என இந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற் றும் தமிழ் ஆகிய 6 மொழிகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கை தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று கோடை விடுமுறை மற்றும் வாரவிடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் இந்த விளம்பர பலகை பார்த்து அந்த பகுதியில் குளிக்காமல் திரும்பி சென்றனர். மேலும் போலீசார் மற்றும் ஊர்க் காவல் படையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் குளிக்காத வகை யில் திருப்பி அனுப்பினர்.

 

No comments: