Marandahalli Map

Saturday, May 31, 2014

மொரப்பூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

மொரப்பூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

First Published : 28 May 2014 04:06 AM IST
மொரப்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து மொரப்பூர் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் சென்னகிருஷ்ணன், செயலர் ரகுநாதன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற சென்னை - மங்களூர் விரைவு ரயில் உள்ளிட்ட இரு ரயில்கள் இரு வழித்தடங்களிலும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக நின்று செல்கின்றன.
இந்த நிலையில், மேற்படி ரயில்கள் வருகிற ஜூலை முதல் தேதி முதல் மொரப்பூரில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆலப்புழா-தன்பாத் டாடா நகர் விரைவு ரயிலும் ஜூலை முதல் தேதி முதல் மொரப்பூர் மற்றும் சாமல்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் நலன் கருதி மொரப்பூர், பொம்மிடி, சாமல்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் வழக்கம் போல நின்று செல்ல ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

No comments: