Marandahalli Map

Saturday, May 31, 2014

தர்மபுரியில் வாக்காளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார்

பதிவு செய்த நாள் : May 30 | 05:45 am
தர்மபுரி.,
 
தர்மபுரி பகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு நன்றி
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தர்மபுரி தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று காலை தர்மபுரியை அடுத்துள்ள ஏமகுட்டியூர், சேரிகொட்டாய், ஆவல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மாலை 5 மணி அளவில் தர்மபுரி நகராட்சியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதிய தொழிற்சாலைகள்
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ததற்கு பொதுமக்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இங்குள்ள இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக விரைவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். ஒகேனக்கல் குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல நடவடிக்கை எடுப்பேன். பெண்களின் கோரிக்கையை ஏற்று இன்னும் ஓரிரு வருடங்களில் மதுபான கடைகளை மூட பாடுபடுவேன்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. செந்தில், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, மாவட்ட செயலாளர்கள் அரசாங்கம், சாந்தமூர்த்தி, நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments: