வத்தல்மலை விபத்து: ஓட்டுநர் மீது வழக்கு
By
தருமபுரி
First Published : 31 May 2014 03:53 AM IST
தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக வாகன ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
வத்தல்மலையிலிருந்து புதன்கிழமை தருமபுரிக்கு வந்த தனியார் பேருந்தில் சுமார் 35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பேருந்தை பொட்லாங்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (28) ஓட்டி வந்தார்.
வத்தல்மலை மலைப் பகுதி 5-ஆவது வளைவில் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்திய பொம்மிடி போலீஸார், அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக ஓட்டுநர் ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்தனர்.

No comments:
Post a Comment