Marandahalli Map

Saturday, May 31, 2014

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட கோவை பள்ளி மாணவர் சடலம் மீட்பு

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட கோவை பள்ளி மாணவர் சடலம் மீட்பு

First Published : 31 May 2014 03:51 AM IST
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கோவை கணபதி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரூபன். இவரது மகன் ஐசக் நியூட்டன் (13). இவர் கோவையிலுள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். ரூபன் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை சுற்றுலா வந்தார்.
அங்குள்ள பிரதான அருவியில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அருவிப் பகுதியிலுள்ள தடுப்புக் கம்பி அருகே குளித்துக் கொண்டிருந்த ஐசக் நியூட்டன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில், போலீஸார், தீயணைப்பு மீட்புப் படையினர், பரிசல் ஓட்டிகள் ஆற்றில் ஐசக் நியூட்டனைத் தேடினர்.
இந்த நிலையில், அருவிப் பகுதியிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள அத்திமரத்துப்பள்ளம் என்ற இடத்தில் ஆற்றில் ஐசக் நியூட்டனின் சடலம் மீட்கப்பட்டது.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சடலத்தை போலீஸார் அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: