பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2010,02:13 IST
மாரண்டஹள்ளி அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபரை கொலை செய்த இருவருக்கு தர்மபுரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்தது. மாரண்டஹள்ளியை அடுத்த எம்.செட்டிஅள்ளியை சேர்ந்தவர் ராஜா (45). இவரது அண்ணன் கிருஷ்ணன். இவரது மனைவி எல்லம்மா (35). கிருஷ்ணன் இறந்து விட்டார். எல்லம்மாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ராஜா (35) என்பவருக்கும் இடையில் கள்ளக்காதல் இருந்தது. இதை கிருஷ்ணனின் தம்பி ராஜா கண்டித்தார். இதையும் மீறி எல்லம்மாள், ராஜாவும் தனிமையில் சந்தித்து வந்தனர். ஆத்திரம் அடைந்த ராஜா, அவரது நண்பர் வேலு (43) ஆகியோர் சேர்ந்து கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி கள்ளக்காதலன் ராஜாவை அடித்து கொலை செய்து, அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீசி சென்றனர். இது தொடர்பாக மாரண்டஹள்ளி போலீஸார் ராஜா, வேலு ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, குற்றவாளிகள் ராஜா மற்றும் வேலுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.
No comments:
Post a Comment