Marandahalli Map

Sunday, November 20, 2011

என்.எஸ்.எஸ்.,முகாம்

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2011,03:38 IST
தர்மபுரி: தர்மபுரி அடுத்த மாரண்டஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ்.,முகாம் பஞ்சப்பள்ளியில் துவக்கப்பட்டது.
முகாம் துவக்க விழாவுக்கு மாரண்டஹள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் காளியப்பன் வரவேற்றார். மாரண்டஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் வேலம்மாள், பஞ்சப்பள்ளி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் அம்பலத்தரசி உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.பஞ்சப்பள்ளி பகுதியில் பொதுசுகாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்களை என்.எஸ்.எஸ்., மாணவர்கள் நடத்தினர். மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவி திட்ட அலுவலர் தங்கவேலு உள்பட ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்தினர். மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் இளங்கோ ஆய்வு செய்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

No comments: