Marandahalli Map

Sunday, November 20, 2011

மாரண்டஹள்ளி பலத்த மழை

தர்மபுரி: பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2010,02:41 IST
தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மாரண்டஹள்ளியில் பலத்த மழை பெய்தது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மாரண்ட ஹள்ளியில் 104 மி.மீ.,
மழை பதிவானது. அரூரில் 57, பென்னாகரம் 20, ஒகேனக்கல் 17.4, பாலக்கோடு 6, பாலக்கோடு சுகர் மில் 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.நேற்று காலை தர்மபுரியில் இருண்ட வானிலை இருந்தது. பகல் 8 மணிக்கு மேல் வழக்கம் போல் வெயில் அடித்தது. மாலையில் இருண்ட வானிலை இருந்த போதும் மழையில்லை. தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசத்துவங்கியது.

No comments: