தர்மபுரி:
பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி பஸ் ஸ்டாண்ட் இரவு நேரத்தில் மின் விளக்கு வசதியில்லாமல் இருளில் மூழ்கி வருவதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரியில் இருந்து மைசூர் செல்லும் முக்கிய வழித்தடத்தில் உள்ள மாரண்டஹள்ளி டவுன் பஞ்சாயத்து பகுதியில் பயணிகள் வசதிக்காக பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு, பஸ்கள் நிற்க போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மின் விளக்கு வசதிகள் இல்லை.
இதனால், இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் உள்ள மின் விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே பயணிகள் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் பெண்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் வந்து செல்ல அச்சப்பட்டு வருகின்றனர்.பஸ் ஸ்டாண்ட் மையப்பகுதியில் மின் விளக்கு அமைத்து, இருளில் இருந்து மீட்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.* பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியில் வரும் பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லை. இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் வெளியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் மட்டும் இரவு நேரங்களில் வெளிச்சம் கொடுக்கிறது. பஸ் உள்ளே வரும் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு வசதி செய்யப்பட்டிருப்பது போல், பஸ்கள் உள்ளே செல்லும் பகுதியிலும் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment