Marandahalli Map

Sunday, November 20, 2011

ஒளிபரப்பு உரிமம் வழங்காமல் மோசடி

தர்மபுரி: "கட்டணம் பெற்று கொண்டு ஒளிபரப்பு உரிமம் வழங்காத சன் "டிவி' நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாரண்டஹள்ளி கேபிள் "டிவி' தொழிலாளர்கள் தர்மபுரி எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். மாரண்டஹள்ளியில் கேபிள் "டிவி' ஒளிபரப்பு உரிமம் பெற்ற பாஸ்கர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: மாரண்டஹள்ளி பகுதியில் தொலைத்தொடர்பு துறையின் அனுமதி பெற்று கேபிள் "டிவி' நடத்தி வருகிறேன். இதில், பல சேனல்களிளை ஒளிபரப்ப உரிமம் வைத்துள்ளேன். சன் "டிவி' நிறுவனத்திடமிருந்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நான்கு சேனல்களை ஒளிபரப்புவதற்கான கட்டணத்தை செலுத்தி ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தம் பெற்றுள்ளேன். தற்போது சன் "டிவி' நிறுவனம் திடீரென இரு சேனல்கள் மட்டுமே எனக்கு ஒளிபரப்ப உரிமம் வழங்கி மோசடி செய்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் இணைப்பை துண்டித்து வருகின்றனர். கட்டணம் செலுத்தியும், உரிமம் பெற்றும் எனக்கு இரு சேனல்கள் மட்டுமே வழங்கி ஏமாற்றியுள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

No comments: