மாரண்டஹள்ளி குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், 5,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மாரண்டஹள்ளி அடுத்த சிக்கமாரண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (45). இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டிற்கு சென்று பேசிகொண்டிருந்தார். அப்போது, ராஜம்மாளின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால், அக்கம் பக்கம் வீடுகள் தப்பின. இதில் வீட்டில் இருந்த 5,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
No comments:
Post a Comment