Marandahalli Map

Sunday, November 20, 2011

பாம்பு தீண்டி விவசாயி பலி

தர்மபுரி: பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2011,00:38 IST
தர்மபுரி அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக பலியானார்.தர்மபுரி அடுத்த மாரண்டஹள்ளி, சீங்காட்டை சேர்ந்த விவசாயி சிவன் (40). நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்துக்கு சென்றபோது, சிவனை பாம்பு கடித்தது. விஷம் தலைக்கேறிய சிவன் மயங்கி விழுந்தார். சிவன் வீட்டுக்கு வராததால், அவரை தேடிய உறவினர்கள் தோட்டத்தில் மயங்கிய நிலையில் இருந்த சிவனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாரண்டஹள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.

No comments: