தர்மபுரி மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்டஹள்ளி, அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் காய்கறிகளை விவசாயிகள் உள்ளூர் உழவர் சந்தைகளுக்கு போக பெங்களூர், சேலம் மார்க்கெட்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தர்மபுரி உழவர் சந்தை மற்றும் பாலக்கோடு உழவர் சந்தைக்கு விவசாயிகள் தினம் அதிகப்பட்சமாக 170 டன் முதல் 210 டன் காய்கறிகள் வரை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த இரு வாரமாக மாவட்டத்தில் பெய்த பரவலான கன மழையால், தக்காளி, கத்திரி, முள்ளங்கி உள்பட அத்யாவசிய காய்கறிகள் வரத்து உழவர்சந்தை மற்றும் வெளி மார்க்கெட்டுகளில் குறைந்துள்ளது. தர்மபுரி, பாலக்கோடு, அரூர் உழவர்சந்தைக்கு தற்போது 110 முதல் 150 டன் காய்கறிகள் வரை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தர்மபுரி உழவர் சந்தைக்கு நேற்று 115 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தனர். இவற்றின் மதிப்பு 2 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். அதிகப்பட்சமாக தக்காளி 15 டன் வந்தது. பச்சை மிளகாய் 3,350 கிலோவும், கேரட் 1,250 கிலோவும், பீட்ரூட் 870 கிலோவும், பீன்ஸ் 1,100, அவரை 1,750 கிலோவும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். வரத்து குறைவால் காய்கறிகள் தினம் ஒரு விலைக்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியும், பொதுமக்கள் மத்தியில் கவலையும் ஏற்பட்டுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் சந்தை விலையை விட 25 சவீதம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தேங்காய் 9 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment