தர்மபுரி: ஒகேனக்கல்லில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு புகுந்ததால், அப்பகுதி மக்களும், பயணிகளும் பெரும் பீதியடைந்தனர்.
ஒகேனக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே காவிரி ஆற்றுப்படுகையில், 40க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில், நேற்று முன்தினம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அப்பகுதி வியாபாரிகள் பார்த்தனர். மலைப்பாம்பை, அப்பகுதியில் உள்ளவர்கள் பிடிக்க முயன்ற போது, பாம்பு ஆற்றுப்படுகையில் இருட்டான பகுதிக்குள் வேகமாக ஊர்ந்து சென்றது.மலைப்பாம்பு புகுந்த தகவல் அறிந்த வனத்துறையினர், விரைந்து சென்று இருட்டு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை பலமணி நேரம் தேடியும் பிடிக்க முடியவில்லை. பாம்பு அப்பகுதியில் புகுந்த தகவல் அறிந்த சுற்றுலா பயணிகள், பெரும் பீதியடைந்தனர்.
No comments:
Post a Comment