Marandahalli Map

Sunday, November 20, 2011

கூலி உயர்வு கேட்டு தொழிலாளர் மறியல்

பாலக்கோடு: பதிவு செய்த நாள் : ஜூலை 03,2010,03:22 IST
பாலக்கோடு அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூலி உயர்த்தி கேட்டு தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்கோட்டை அடுத்த மாரண்டஹள்ளி அத்திமுட்லு ஏரியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 150 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களக்கு ஒரு நாள் கூலியாக 75 வழங்கப்படுகிறது. கூலியை 100 ரூபாயாக உயர்த்தி தரக்கோரி நேற்று முன்தினம் மாலை மாரண்டஹள்ளி நான்கு ரோடு சாலையில் பெண்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் மணி, பி.டி.ஓ., நாகராஜன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "பணியின் அளவை பொறுத்து தான் கூலி வழக்கப்படுவதாகவும், பணி அளவு அதிகமானால் கூலி உயர்த்தி தருவதாகவும்' அதிகாரிகள் கூறியதை அடுத்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டனர். மறியலால், பாலக்கோடு - மாரண்டஹள்ளி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments: