Marandahalli Map
Sunday, November 20, 2011
மூன்றாவது திருமணம் செய்த மேஸ்திரி கைது
தர்மபுரி: பாலக்கோடு அருகே மூன்றாவது திருமணம் செய்த கணவனை தட்டி கேட்ட இரண்டாவது மனைவி சித்ரவதை செய்த மேஸ்திரியை போலீஸார் கைது செய்தனர். பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி காந்திநகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கட்டிட மேஸ்திரி சுரேஷ் (27). இவருக்கு இரு ஆண்டுக்கு முன் மாரண்டஹள்ளி அடுத்த செவத்தாம்பட்டியை சேர்ந்த அருள்மொழி (23) என்பவருக்கும் திருமணம் நடந்தது. குடும்பத் தகராறு ஏற்பட்டதால், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதத்துக்கு முன் கோவை பகுதியில் கட்டிடம் பணிக்கு சென்ற சுரேஷ் அவருடன் சித்தாளாக பணிபுரிந்த கோவை உலகம் பகுதியை சேர்ந்த மகேஷ் (24) என்பரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மாரண்டஹள்ளிக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மஞ்சு (22) என்ற பெண்ணை சுரேஷ் காதலித்தார். இது குறித்து கேட்ட மகேஷை, சுரேஷ் அடித்து துன்புறுத்தியுள்ளார். கடந்த வாரம் மஞ்சுவை பெங்களூருக்கு அழைத்து சென்று சுரேஷ் திருமணம் செய்துகொண்டார். இது குறித்து மகேஷ் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment