பாலக்கோடு:
மாரண்டஹள்ளி அருகே நண்பர் வீட்டில் நகையை திருடியவரை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஹள்ளி அடுத்த சிக்கமாரண்டஹள்ளியை சேர்ந்தவர் கமலேஷ் (57). இவரது மகன் செந்தில். இவருடைய நண்பர் சிக்கமாரண்டபுதூர் உங்கரப்பன் மகன் சுரேஷ். கடந்த 15ம் தேதி செந்திலை பெண் பார்க்க பெண் வீட்டார் வந்தனர். அப்போது, செந்தில் பெற்றோர் வீட்டில் இருந்த நகையை தேடிய போது காணவில்லை.
இது குறித்த கமலேஷ் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஹள்ளி போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சுரேஷிடம் விசாரித்த போது, செந்தில் வீட்டில் நகை திருடியதையும், தர்மபுரியில் உள்ள கடையில் விற்றதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுரேஷை போலீஸார கைது செய்தனர். நகைகளை போலீஸார் மீட்டனர்.
No comments:
Post a Comment